Home » Deva » Aadathada Aadathada Manitha Song Lyrics in Tamil

Aadathada Aadathada Manitha Song Lyrics in Tamil

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து
ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்
பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

பத்து மாசம் சுமந்து
அவ பட்டினிதான் கெடப்பா
நம்மை பக்குவமா பெத்தெடுக்க
பத்தியம்தான் இருப்பா
மூச்சடக்கி முக்குளிச்ச
முத்த போல காப்பா
அவ முந்தானையில் தொட்டில் கட்டி
முத்தம் நூறு கொடுப்பா

பெத்தபுள்ள துடிக்கும் போதுஊஉ
பெத்தபுள்ள துடிக்கும் போது
கண்ணீர் சிந்துவா
அது கண்ணீர் இல்லடா
அவ ரத்தம் தானடா
பூமியில நடந்து வரும்
தெய்வம் தாண்டா தாயி
அத புரிஞ்சிக்காம
பெத்த மனச தவிக்க விட்ட பாவி

ஆடாதடா யப்பா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து
ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்
பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

சினிமாவுல காதலிச்சா
ரசிக்குதப்பா உள்ளம்
நெஜ வாழ்கையில காதலிச்சா
பறிக்குதப்பா பள்ளம்
பொறக்குறப்போ தலையிலதான்
எழுதி வைச்சதப்பா
ஒரு பொண்ணும் ஆணும் ஆசப்பட்டா
அதுவும் என்ன தப்பா

காத்துக்கொரு வேலி இல்ல
காத்துக்கொரு வேலி இல்ல
காதலுக்கும் வேலி இல்ல
ஜாதி மத பேதம் என்ன
சாத்தானுக்கு வேதம் என்ன
நெழலும் மிதிச்சு அழிக்க
வந்த முட்டாளு
பூமி சுத்துற மட்டும்
காதல் இருக்கும் நீ கேளு

தெரிஞ்சும் ஆடாதடா யப்பா
ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
அந்த ஆண்டவன்தான் சாவி கொடுத்து
ஆட்டி வைக்கிறான்
ரொம்ப ஆடிபுட்டா வாழ்கையைதான்
பூட்டி வைக்கிறான்

ஆடாதடா ஆடாதடா மனிதா
ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா

, , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*