Home » Feat Srinisha Jayaseelan » Adi Penne Oru Murai song lyric in tamil

Adi Penne Oru Murai song lyric in tamil

ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

பெண் : ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண் : உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

ஆண் : ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

பெண் : வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

ஆண் : இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

பெண் : இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

ஆண் : அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

பெண் : நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

பெண் : உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ

பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

ஆண் : விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
பெண் : அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

ஆண் : நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

ஆண் : நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி

ஆண் : உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

பெண் : உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*