Home » Tamil » Ilayaraja » Adikuthu Kuliru song lyric in tamil

Adikuthu Kuliru song lyric in tamil

பெண் : அடிக்குது குளிரு ஹா
துடிக்குது தளிரு

பெண் : ஹான்
அடிக்குது குளிரு
துடிக்குது தளிரு
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பைபோல உன் அன்பை தேடுது

பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா

பெண் : அடிக்குது குளிரு…
ஆண் : ஆ அது செரி அது செரி
பெண் : துடிக்குது தளிரு
ஆண் : இத பாருடா…

பெண் : முல்லை பூங்கொடி
கொம்பை தேடுது
ஆண் : அப்டியா…
பெண் : கொம்பைபோல உன்
அன்பை தேடுது
ஆண் : ஓஹோ…

பெண் : வா கட்டபொம்மன் பேரா
கட்டழகு வீரா
ஆண் : எப்டி… எப்டி…
பெண் : கிட்ட வந்து நேரா
கட்டிக்கொள்ளு ஜோரா…

பெண் : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ
ஆடிரதம் அழைக்குது
ஆண் : ஆஆஆ…ய்ய்……
பெண் : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ
ஆலிலை தவிக்குது
ஆண் : ஓஓஹோ

பெண் : முத்தம் நூறு கேட்டு
வாங்கவே
நாணம் என்னை தடுக்குது
ஆண் : அட்ரா சக்க
பெண் : பித்தம் ஏறி தூண்டில் மீனென
நூலிடை துடிக்குது
ஆண் : இது எப்படி இருக்கு

பெண் : சுகமான கட்டில் நாடகம்
நீயும் நானும் ஆடலாம்
ஆண் : ஆ…ஹா
பெண் : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்
வெட்கமின்றி கூடலாம்.
ஆண் : அப்டி போடு

பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…

பெண் : அடிக்குது குளிரு
ஆண் : ஆ அது செரி அது செரி…
பெண் : துடிக்குது தளிரு…
ஆண் : அது ரொம்ப செரி ரொம்ப செரி…

ஆண் : சொன்னால் போதும்
நூறு மாப்பிள்ளை …
பெண் : மாலையிட கிடைக்கலாம்
ஆண் : இங்கே வந்து காலை மாலை தான்
பெண் : சேலையை துவைக்கலாம்

ஆண் : என்னைபோல நல்ல மாப்பிள்ளை
பெண் : வாய்ப்பதொரு அதிசயம்
ஆண் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
பெண் : பாவை என் பாக்கியம்

பெண் : நெடு நாட்கள் ஏங்கும்
ஏக்கம் தான்
இந்நாள் இங்கு தீர்ந்தது
ஆண் : இல்லையா பின்ன
பெண் : மங்கை செய்த பூர்வ புண்ணியம்
மன்னன் வந்து சேர்ந்தது
ஆண் : போச்சுடா…

பெண் : உன்னை பார்த்து நான்
சொக்கி போகிறேன்
வா கட்டபொம்மன் பேரா
கட்டி கொள்ளு ஜோரா…

ஆண் : அடிக்குது குளிரு
பெண் : ஆ..ஆ… அஹ்…ஹஹா……ஹா……
ஆண் : என்னை மடக்குது தளிரு
பெண் : ம்ம்…ஹ்ம்…ஹா….ஹா…
ஆண் : முல்லை பூங்கொடி
பெண் : ம்ம்…ஹ்ம்ம்ம்….ம்ம்ம்ம்…
ஆண் : கொம்பை தேடுது
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : கொம்பைபோல என்
பெண் : ஹ ஹ ஹ ஹா…
ஆண் : அன்பை தேடுது..
வாரே…வாரே…வா…
கட்டிதங்க மேனி கட்டழகு ராணி…
பெண் : அஹா.. ஆஹ்…
ஆண் : கொட்டி பார்த்த தேனீ…
பெண் : ஆஆ ஆஆ அஹ அஹ்ஹ…
ஆண் : கட்டில் பக்கம் வா நீ…
பெண் : அஹ்ஹ்,…ஹா ஹா…
ஆண் : அடிக்குது குளிரு….

, , , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*