
ஐயே மெத்தகடினம்-உமக்கடிமை**-ஐயே மெத்தகடினம்.
பொய்யாதபொன்னம்பலத் தையாயிருக்குமிடம்
நையாதமனிதர்க்கு உய்யாதுகண்டுகொள்ளும். (ஐயே)
மானாபி மானம்விட்டுத்-தானாகி நின்றவர்க்குச்
சேனாதி பதிபோலே-ஞானாதி பதியுண்டு
பாருமே-கட்டிக்காருமே-உள்ளேசேருமே– அது போறுமே
முப்பாழுந் தாண்டிவந்து அப்பாலே நின்றவர்க்கு
இப்பார்வை கிடையாது அப்பால் திருநடனம்
ஆடுவார்-தாளம்போடுவார்-அன்பர்கூடுவார்-இசைபாடுவார்-இதைக்
கண்டாருங் கிடையாது விண்டாருஞ் சொன்னதில்லை
அண்டாண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கு
மல்லவோ-பறையன்சொல்லவோ-அங்கேசெல்லவோ-நேரமாகுதல்லவோ .(ஐயே)
