
ஆண் : அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே….
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே…
ஓ….ஓ….ஓ…ஓ..
ஆண் : அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
இரு கண்ணின் மணியே
ஓ…ஓ….ஓ…ஓ…
தெய்வம் நீயே
ஓ…ஓ…ஓ…ஓ…
ஆண் : அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
ஆண் : பூவிழி ஓரம்
ஓர் துளி நீரும்
நீ வடித்தால்
மனம் தாங்காது
ஆண் : பொன்முகம் கொஞ்சம்
வாடி நின்றாலும்
நான் துடிப்பேன்
வலி தாளாது
ஆண் : பத்து மாசம் சுமந்து
பட்ட பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க
அள்ளிக்கையில் எடுத்த
தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…….
வாட்டுவதோ.. என்னை நீ..யே.
ஆண் : அம்மா அம்மா
எந்தன் ஆருயிரே
நானும் நீயும்
என்றும் ஓருயிரே
ஆண் : பாதைகள் மாறி
ஓடிய கன்றை
தாய்ப்பசுதான்
இங்கு ஏற்காதா
ஆண் : கூட்டிலிருந்து
குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி
அள்ளிச் சேர்க்காதா
ஆண் : நல்ல காலம் பிறக்க
உன்னை நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க
இங்கு பாடல் படித்தேன்
ஆண் : போதும் போதும்…
பிரிந்தது போதும்….
வாடுதம்மா பிள்ளையே…
வாட்டுவதோ என்னை நீ..யே…
