
அமுதும் தேனும் எதற்கு?
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அருவி தரும் குளிர் நீர் அன்பே இனிமேல்
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அதுவும் சுடுநீராகும் நமக்கு
அமுதும் தேனும் எதற்கு?
நிலவின் நிழலோ உன் வதனம் ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
நிலவின் நிழலோ உன் வதனம்! புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்!
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக் கனியே வா
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு
விழியாலே காதல் கதை பேசு மலர்க்
கையாலே சந்தனம் பூசு தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே தமிழ்
மொழி போலே சுவையூட்டும் செந்தேனே
உடல் நான் உயிர் நீ தானே வான்
அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
அமுதும் தேனும் எதற்கு?
