Home » D. Imm𝕒n » Anbulla Appa Appa Song Lyrics in Tamil

Anbulla Appa Appa Song Lyrics in Tamil

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே

ஆண் : மாதக்கணக்கே தாயும் சுமந்து
வந்தது தான் இவனது உயிரே
காலம் முழுக்க என்னை சுமந்து
காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே

ஆண் : தூசி என்னை தொடவும்
விட மாட்டாய்
தோளில் எனை சுமந்து
நடை போட்டாய்
வந்தாயே நீ என் வரமாய்

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : தோழன் என நீ
தோளும் கொடுத்து
தோல்விகளை ஜெய்த்திட வருவாய்

ஆண் : சோகம் எதையும்
உன்னுள் மறைத்து
புன்னகையே எனக்கென தருவாய்

ஆண் : கண் இமையில்
என்னை நீ அடைக்காத்து
தூங்கிடவும் மறப்பாய்
என்னை பார்த்து
வாழ்வாயே நீ என் நிழலாய்

ஆண் : அன்புள்ள அப்பா அப்பா
யாருமே உன்போல் இல்லை
மண் மேலே
அன்புள்ள அப்பா அப்பா
தாயையும் உன்னில்
கண்டேன் அன்பாலே

ஆண் : எனக்கு எது தேவை உலகிலே
கொடுத்திடுவாய் நீ முதலிலே
வேண்டாமல் தரும் தெய்வம்
நீ தானே உண்மையிலே

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*