Home » Tamil » Ilayaraja » Thendral Vandhu Theendum Pothu song lyrics in tamil

Thendral Vandhu Theendum Pothu song lyrics in tamil

குழு : …………………………….

ஆண் : ………………………….

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை
நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

குழு : ………………………………

பெண் : விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆண் : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெண் : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெண் : உண்மையிலே உள்ளது
என்ன என்ன..
வண்ணங்கள் என்ன என்ன…

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

, , , ,

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*