
பெண் : ஆணி பொன்
தேர் கொண்டு மாணிக்க
சிலை என்று வந்தாய்
நின்றாய் இங்கே
பெண் : ………………..
பெண் : காணிக்கை
பொருளாகும் காதல்
என் உயிராகும் நெஞ்சை
தந்தேன் அங்கே
பெண் : ………………..
ஆண் : அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
ஆண் : படித்தால்
ரசிக்கும் கனிபோல்
இனிக்கும்
பெண் : அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
பெண் : படித்தால்
ரசிக்கும் கனிபோல்
இனிக்கும்
ஆண் : { வானுலகமென்னும்
மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம்
தேனிலவின் வண்ணம் } (2)
பெண் : நீல விழி
பந்தல் நீ இருக்கும்
மேடை கோலமிடும்
ஆசை தூது விடும்
ஜாடை
பெண் : இளமையில்
இனியது சுகம் இதை
பெறுவதில் பல வித
ரகம் இந்த அனுபவம்
தனி ஒரு விதம் மலரும்
வளரும் பல நாள் தொடரும்
ஆண் : அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
ஆண் : படித்தால்
ரசிக்கும் கனிபோல்
இனிக்கும்
பெண் : ………………..
பெண் : { பாலில் விழும்
பழம் எனும் போதை
பெறும் இளம் மனம் } (2)
அள்ளத்தான்
அள்ளிக்கொள்ளத்தான்
ஆண் : { காதல் நிலா
முகம் முகம் கண்ணில்
உலா வரும் வரும் } (3)
மெல்லத்தான் நெஞ்சை
கிள்ளத்தான்
பெண் : கொடியிடை
விளைவது கனி இந்த
கனியிடை விளைவது
சுவை
பெண் : அந்த சுவை
பெற நமக்கென்ன
குறை நெருக்கம்
கொடுக்கும் நிலை
தான் மயக்கம்
ஆண் : அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
ஆண் : படித்தால்
ரசிக்கும் கனிபோல்
இனிக்கும்
பெண் : ………………..
ஆண் : பாவை உனை
நினைக்கையில் பாடல்
பெறும் கவிக்குயில்
பக்கம் வா இன்னும்
பக்கம் வா
பெண் : { கோவை இதழ்
இதோ இதோ கொஞ்சும்
கிளி அதோ அதோ } (2)
பெண் : இன்னும் நான்
சொல்ல இன்னும் நான்
சொல்ல வெட்கம் தான்
ஆண் : மழை தரும்
முகிலென குழல்
நல்ல இசை தரும்
குழலென குரல்
ஆண் : உயிர் சிலையென
உலவிடும் உடல் நினைத்தேன்
அணைத்தேன் மலர்போல்
பறித்தேன்
பெண் : அழகிய தமிழ்
மகள் இவள் இரு விழிகளில்
எழுதிய மடல் மெல்ல
மொழிவது உறவெனும்
குரல்
பெண் : படித்தால்
ரசிக்கும் கனிபோல்
இனிக்கும்
