
பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல்
பெண்ணல்லவோ
பெண் : நீ என்னைப்
போல் பெண்ணல்லவோ
ஆண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
ஆண் : என்னுயிரும்
நீ அல்லவோ அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
பெண் : …………………..
பெண் : { கன்னிக் காய்
ஆசைக் காய் காதல்
கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய் } (2)
ஆண் : மாதுளங்காய்
ஆனாலும் என் உள்ளங்காய்
ஆகுமோ என்னை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ
பெண் : இத்திக்காய்
காயாதே என்னைப்
போல் பெண்ணல்லவோ
பெண் : ……………………..
ஆண் : { இரவுக்காய்
உறவுக்காய் ஏங்கும்
இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும்
காய் நேரில் நிற்கும்
இவளைக் காய் } (2)
பெண் : உறவங்காய்
ஆனாலும் பருவங்காய்
ஆகுமோ என்னை நீ
காயாதே என்னுயிரும்
நீயல்லவோ
ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ
ஆண் & பெண் : ……………….
பெண் : { ஏலக்காய் வாசனை
போல் எங்கள் உள்ளம்
வாழக் காய் ஜாதிக் காய்
பெட்டகம் போல் தனிமை
இன்பம் கனியக் காய் } (2)
ஆண் : சொன்னதெல்லாம்
விளங்காயோ தூது வழங்காய்
வெண்ணிலா என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ
ஆண் & பெண் : ……………….
ஆண் : { உள்ளமெல்லாம்
மிளகாயோ ஒவ்வொரு
பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் கிளர்ந்தது
போல் வெண்ணிலவே
சிரித்தாயோ } (2)
பெண் : கோதை
என்னை காயாதே
கொற்றவரங்காய்
வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய்
வெண்ணிலா
ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ
ஆண் & பெண் : ……………….
