
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : அபிராமி சிவகாமி
கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன்
நான்தானம்மா
ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்
அது போதுமே
ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற
வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு
ஈடாகுமா
ஆண் : விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு
கிடைக்காதம்மா
ஆண் : ஈரயைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு
அறிவேனம்மா
ஆண் : ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட
கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே…ஏ…
ஆண் : அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது….
ஆண் : {அம்மா என்றழைக்காத
உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)
